ஈரோட்டில் இந்து முன்னணி அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்ன சடையம் பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் அதே பகுதியில் இந்து முன்னணி அலுவலகத்தை நடத்தி வருகிறார்.
இங்கு நுழைந்த இரண்டு பேர் அலுவலகம் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துவிட்டு தப்பியோடினர்.
இது குறித்து சக்திவேல் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
















