கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது.
பண்டிகை காலம் மற்றும் பள்ளி விடுமுறை காரணங்களால் பல்வேறு பகுதிகளிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் மூஞ்சிக்கல் ஏரி சாலை வரை 5 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சுற்றுலாப் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
மேலும் அவசர தேவைகளுக்குச் செல்ல முடியாமல் தவித்த உள்ளூர் மக்கள் சீசன் காலங்களில் போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.
















