அமெரிக்காவின் வான்பரப்பில் ஒளிர்ந்தவாறு வினோதமான மர்ம பொருள் பறந்து செல்வது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
பூமியைத் தவிர இந்தப் பிரபஞ்சத்தில் வேறு உயிர்கள், அதாவது ஏலியன்கள் வாழ்கின்றனவா என்ற தீவிர தேடலில் விஞ்ஞானிகள் உள்ளனர்.
பறக்கும் தட்டுக்கள், அடையாளம் அறிய முடியாத மர்மமான வான்பொருட்கள், ஏலியன்கள் நடமாட்டம் என அடிக்கடி வெளியாகும் செய்திகள் ஏலியன்கள் குறித்த ஆவலை தூண்டுகின்றன.
ஆனால் அறிவியல் ரீதியாக இதுவரை ஆதாரம் எதுவும் கிடைக்காத நிலையில், தென் அமெரிக்காவின் சிலியில் உள்ள வானில், ஒளிர்ந்தவாறு வினோதமான மர்ம பொருள் பறந்து சென்றது போன்ற வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.
















