தெலங்கான மாநிலம் ஐதராபாத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த மாருதி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காட்கேசரில் இருந்து உப்பல் நோக்கி மாருதி ஆம்னி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆம்னியில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது.
சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் ஹேண்ட் பிரேக்கை அழுத்தவே, கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன், தீப்பிடித்தபடி பெட்ரோல் நிலையத்திற்குள் புகுந்தது. துரிதமாக செயல்பட்ட பெட்ரோல் நிலைய ஊழியர்கள், தீயணைப்பான்களை பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
















