பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்த MRI ஸ்கேனர் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஜோஹோ நிறுவனம் மற்றும் மத்திய அரசின் ஆதரவுடன், பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனமான வோக்சல்கிரிட்ஸ், MRI ஸ்கேனரை உருவாக்கியுள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஸ்கேனரை, பெங்களூரு நிறுவனம் நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது.
அந்த ஸ்கேனர் சந்திரபூர் புற்றுநோய் அறக்கட்டளையில் நிறுவப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு நிறுவனங்களின் MRI ஸ்கேனர் விலையை விட, உள்நாட்டு தயாரிப்பின் விலை 40 சதவீதம் குறைவாக உள்ளது.
இது இந்தியாவின் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் துறையில் புதிய புரட்சியாக பார்க்கப்படும் நிலையில், ஆத்ம நிர்பார் பாரதத்தின் சிறப்பான வெற்றிகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
















