சென்னையில் இருந்து கொச்சி செல்லும் விமானங்களின் கட்டணம் மும்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஜனவரி 20ம் தேதி வரை கேரளாவுக்கு செல்லும் விமானங்களில் இருமுடி எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஐயப்ப பக்தர்களின் முன்பதிவு அதிகரிக்க தொடங்கியது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து கொச்சி செல்லும் விமானங்களின் கட்டணம் மும்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கொச்சி செல்ல விமான கட்டணம் 3 ஆயிரத்து 681 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 11 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் நேரடியாக கொச்சி செல்லாமல் பெங்களூரு சென்று அங்கிருந்து மாறினால் விமான டிக்கெட் விலை 17 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நாளொன்றுக்கு 4 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் கூடுதல் சேவைகளை வழங்க விமான நிறுவனத்திற்கு ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















