எச்-1பி விசா அதிக செலவு பிடிப்பதாலும், போட்டி அதிகமாக இருப்பதாலும், திறமையான பணியாளர்கள் பிரீமியம் விசா விருப்பங்களை நாட தொடங்கியுள்ளனர்.
எச்-1பி விசாவுக்கு 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை செலவான நிலையில், தற்போது 88 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அதிரடி கட்டண உயர்வு மற்றும் குலுக்கல் முறையை மாற்றி, அதிக ஊதியம் பெறுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தேர்வு முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
இதன் காரணமாகத் திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்கள், மற்ற விசாக்களில் கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளனர்.
அதவாது H-1B விசா போன்ற முறைகளிலிருந்து விலகி, ஒ-1, இபி- 1ஏ, இபி-2 மற்றும் எல்-1 போன்ற அசாதாரண திறமைகளுக்காக வழங்கப்படும் விசாக்களை நோக்கிச் செல்கின்றனர்.
மேலும், விசா விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேசி பிரச்னையைத் தீர்க்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
















