தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் சுற்றுலா பேருந்து உரிமையாளர் மீது பயணிகள் தாக்குதல் நடத்திய காட்சி வெளியாகியுள்ளது.
காரிமங்கலத்திலிருந்து மேல்மருவத்தூருக்கு சென்ற சுற்றுலா பேருந்து சென்ற நிலையில், பயணிகளிடம் முழுகட்டணத்தையும் பேருந்து உரிமையாளரான ஒடசல்பட்டியைச் சேர்ந்த அன்பழகன் கேட்டுள்ளார்.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவர் மீது பயணிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்த பேருந்து உரிமையாளர் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து வந்த கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
















