தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஸ்ரீ மாயாண்டி சுவாமி கோயிலில் பனை ஓலை படையல் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
பெத்தநாடார்பட்டி கிராமத்தில் உள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விழா கோலாகலமாக நடைபெற்றது. அப்போது தேங்காய், வாழைத்தார் உள்ளிட்டவைகளை பனை ஓலை பெட்டியில் ஊர்வலமாக எடுத்து வந்த பக்தர்கள் சுவாமிக்குப் படையலிட்டு தரிசனம் செய்தனர்.
















