முடிச்சூர் ஆம்னி பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஓட்டுநர்களுக்கான ஓய்வறையை சிஎம்டிஏ நிர்வாகம், காவலர்களுக்கு ஒதுக்கீடு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம் அமைந்துள்ளது.
முறையான திட்டமிடல் இல்லாததால் உரிய அடிப்படை வசதிகள் இன்றி பேருந்து ஓட்டுநர்கள் அவதியடைந்து வந்தனர்.
இதனிடையே, ஓட்டுநர்களுக்கான ஓய்வறை 100-க்கும் மேற்பட்ட பெட்டாலியன் காவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஓய்வு எடுக்க இடமின்றி ஓட்டுநர்கள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
















