திருச்சியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவடைந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் பெயர் விடுபட்டவர்கள், புதிய படிவம் வழங்க உள்ளவர்கள் என அனைவருக்குமான சிறப்பு முகாம் திருச்சி முழுவதும் நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் பலரும் தங்களது படிவங்களை வழங்கியும், திருத்தங்களை மேற்கொண்டும் பயன்பெற்றனர். இதனிடையே பொதுமக்கள் தவறான முகாமில் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
சேலம் மாவட்டத்தின் ஆயிரத்து 346 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துகொண்டுள்ள அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை மேற்பார்வையிட்டு வருகின்றனர். பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள், தங்கள் ஆவணங்களுடன் வந்து பெயர்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















