அணுசக்தி நீர் மூழ்கி கப்பலில் இருந்து 3500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட கே-4 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் உள்ள விசாகபட்டினத்தில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் அரிகாட்டில் இருந்து கே-4 பாலிஸ்டிக் ஏவகணை சீறிப்பாய்ந்தது.
3500 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, கடல் சார்ந்த அணுசக்தி தாக்குதல் திறனை மேம்படுத்துகிறது.
கே-4 ஏவுகணையின் ஏவுதள திறன்கள், நீருக்கடியில் ஏவுவதற்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் கே-4 ஏவுகணை இரண்டரை டன் அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.
















