இந்தியாவின் வேகமான வளர்ச்சி பிரமிப்பூட்டுவதாக வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் கூறியிருப்பது இணையதளங்களில் விவாதத்தை தூண்டியுள்ளது.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள, வீக்கெண்ட் இன்வெஸ்டிங்கின் நிறுவனர் அலோக் ஜெயின், நியூயார்க்கில் இருந்து 8 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா வந்த நபர் தன்னிடம் பகிர்ந்து கொண்டதை அப்படியே பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் ஒப்பிட்டு இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை பாராட்டியுள்ள அந்த நபர், இந்தியாவிடம் அற்புதமான ஆற்றல் உள்ளதாகக் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான விலை வேறுபாட்டைப் பகிர்ந்து கொண்ட அவர், இந்தியாவுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவில் அனைத்தும் கணிசமாக விலை உயர்ந்திருப்பதை குறிப்பிடுவதாகப் பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக இணையதள சேவை, மருத்துவக் காப்பீடு, சொத்து வரி போன்றவை இந்தியாவில் மிகவும் குறைவு என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை ஆமோதிக்கு வகையில் பல்வேறு தரப்பினரும் இந்தியாவின் வளர்ச்சி பற்றிய கருத்துகளை பகிர்நது வருகின்றனர்.
















