குளித்தலை அருகே மதுபோதையில் 7 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபரை பொதுமக்கள் தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கழுவூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மது போதையில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது.
2 மணி நேரமாகக் காணாமல்போன மகளை பெற்றோர் தேடி வந்த நிலையில், அதே இடத்திற்கு அழைத்து வந்து சிறுமியை விட்டுச் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது, பொதுமக்கள் இளைஞரை பிடித்துத் தாக்கிப் போலீசில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.
இதனிடையே, இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுமாறும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















