மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு சித்திரை வீதியில், கழிவுநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுவதால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அங்கு உள்ள பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் வெளியேறிச் சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே குழாயை சீரமைத்து, தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற வேண்டுமென மாநகராட்சிக்குப் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
















