சென்னை வேளச்சேரியில் பயணிகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தவிர்க்கும் வகையில் போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது போன்ற மனித பொம்மையைப் போலீசார் தூக்கி சென்று விநோத விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
பின்னர் பயணிகள் யாரும் தண்டவாளத்தைக் கடந்து செல்லக் கூடாதெனவும் ரயில்வே மேம்பாலத்தைப் பயன்படுத்த வேண்டுமெனவும் அவர்கள் பயணிகளுக்கு எடுத்துரைத்தனர்.
















