கேப்டன் விஜயகாந்தின் சேவைகளை பாராட்டிப் பிரதமர் மோடி பத்ம விபூஷன் விருதை வழங்கியதாகவும், அவரைப் பற்றி வருங்கால சந்ததியினர்அறிந்து கொள்ள வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகச் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
விஜயகாந்த் சிறந்த நடிகராக, சமூக சேவகராக இருந்தவர் என்றும் விஜயகாந்த்தின் சேவையை பாராட்டிய பிரதமர்மோடி பத்ம விபூஷன் விருது வழங்கிக் கெளரவித்தார் என்று எல்.முருகன் கூறினார்.
அனைவரும் சாப்பிட்டார்களா எனக் கேட்டபிறகு தான் விஜயகாந்த் சாப்பிடுவார் என்றும் வருங்கால சந்ததியினரும் கேப்டன் விஜயகாந்த் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று எல்.முருகன் தெரிவித்தார்.
















