அடுத்த 5 ஆண்டுகளில் 48 நகரங்களில் ரயில்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
நாடு முழுவதும் ரயில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து வகையான கட்டமைப்புகளும் செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி சென்னை, மும்பை உள்ளிட்ட 48 முக்கிய நகரங்களில் 2030ம் ஆண்டுக்குள் ரயில்களின் இயக்கம் இரட்டிப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய ரயில் முனையம் உருவாக்குதல், கூடுதல் நடைமேடை அமைப்பது, ரயில் பாதை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
















