நதிகளையும், மரங்களையும் காப்பது நம் அனைவரின் கடமை என மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் அறிவுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ஈஷா யோகா மையம் சார்பில் விவசாயிகள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஈஷா யோகா மையத்தின் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ், மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் மற்றும் எம்பிகளும், எம்.எல்.ஏ-களும் பங்கேற்றனர்.
மேலும், மரம் சார்ந்த விவசாயம் குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான விவசாயிகளும் பங்கேற்றனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளகான், மரங்கள், நதிகளை பாதுகாப்பதால் மனித குலத்திற்கு ஏற்படும் நன்மைகளை எடுத்துரைத்தார்.
மேலும், தென் நாடுகளுக்குக் காவிரியின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய அவர், மரம் சார்ந்த விவசாயத்தை பெருக்கி, மனித இனத்தை காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
















