பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், அதற்கான ஆயத்த மாநாடு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
அதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6-ம் தேதி நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
















