இந்தியாவில் அபய்ராப் என்ற வெறிநாய்க்கடி மருந்தின் போலிகள் புழக்கத்தில் உள்ளதாக ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் ரேபிஸ் நோய் தடுப்புக்காக ‘அபய்ராப்’என்ற வெறிநாய்க்கடி தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை ஐதராபாத்தை சேர்ந்த இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஹியூமன் பயோலாஜிகல்ஸ் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரிக்கிறது.
தற்போது இந்த மருந்தின் போலிகள் புழக்கத்தில் உள்ளதாக ஆஸ்திரேலிய அரசின் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலி மருந்துகளின் விற்பனை அதிகம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
















