வெறும் இரண்டே விநாடிகளில் 700 கிமீ வேகத்தை எட்டி சீனாவின் மாக்லெவ் ரயில் சோதனை ஓட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.
இந்த சோதனையை சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.
சோதனையின் போது, சுமார் ஒரு டன் எடையுள்ள மாக்லேவ் ரயில் என்ஜின் 400 மீட்டர் குறுகிய பாதையில் வேகமாக இயக்கப்பட்டு, பின்னர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. இதுவே இதுவரை சோதிக்கப்பட்ட வேகமான ரயில் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















