இந்த ஆண்டில் மட்டும் 81 நாடுகளிலிருந்து 24 ஆயிரத்து 600 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் குடியேறியும், பணியாற்றியும் வருகின்றனர். இருப்பினும், சில காரணங்களால் வெளிநாடுகளிலிருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டும் வருகின்றனர்.
இந்த நிலையில், 2025-ல் சவுதி அரேபியாவில் இருந்து தான் அதிகளவிலான இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதற்கடுத்தபடியாக அமெரிக்கா, மியான்மர், மலேசியா உள்ளிட்ட நாடுகளும் இந்தியர்களை வெளியேற்றியுள்ளது.
















