கோலாலம்பூரில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றபோது மழை பெய்ய தொடங்கியது. இதன் காரணமாக, பார்வையாளர்கள் அனைவருக்கும் RAIN COAT வழங்கப்பட்டது. அதனை அணிந்தபடி பார்வையாளர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் கலந்துகொண்டனர். விஜய் உடன் பணியாற்றி நினைவுகளை பகிர்ந்துகொண்ட அவர்கள், விஜய் உடன் சேர்ந்து குழு புகைப்படமும் எடுத்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து பார்வையாளர்களுக்கும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒளிரும் hand band வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் அதனை அணிந்து ஒளிர செய்ததால், அரங்கமே வண்ணமயமாக ஜொலித்தது.
இதனிடையே, விஜய்யின் ரசிகர்கள் TVK, TVK என உற்சாகக் குரலெழுப்பினர். அதனைக் கேட்ட விஜய், இந்த நிகழ்வில் அதனைக் கூற வேண்டாம் என ரசிகர்களுக்குச் சைகை காட்டினார்.
















