தேனி மாவட்டத்தில் இருவேறு இடங்களில் 12 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வைகை அணை பகுதியில், காவல்துறையினர் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை மடக்கி அவர்கள் சோதனையிட்டனர். அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கருப்பையா, அஜ்மர் அலி ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல் மயிலாடும்பாறையில் அரசு பேருந்தில் 4 கிலோ கஞ்சா கடத்தி வந்த சுதாகர் மற்றும் சுமதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
















