சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜையன்று 30 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தேசவம் போர்டு தெரிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 16ஆம் தேதி மண்டல பூஜைக்காகத் திறக்கப்பட்டது.
நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், சபரிமலை மண்டல பூஜை நிறைவு விழாவில் ஆயிரக்கணக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
41 நாட்கள் நீடித்த மண்டல பூஜை யாத்திரை நிறைவு பெற்றதை அடுத்து மகர விளக்கு பூஜைகளுக்காக வரும் 30ஆம் தேதி மாலை 5 மணிக்குச் சபரிமலை கோயில் நடை திறக்கப்படும் எனத் தேசவம் போர்டு தெரிவித்துள்ளது.
மகர விளக்குப் பூஜையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வரையிலும் ஆன்லைன் முன்பதிவு முடிந்து விட்டதாகவும், ஜனவரி 11 முதல் 19ஆம் தேதி வரையிலான தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜனவரி 13ஆம் தேதி 35 ஆயிரம் பேர், ஜனவரி 14ஆம் தேதி 30 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
















