சென்னை போரூரில் கயிற்றால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
போரூரை சேர்ந்த சத்யராஜ் என்பவர், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் மதுபோதையில் இருந்த சத்யராஜ், தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த கயிற்றைக் கொண்டு மனைவி ரோஸ்மேரியின் கழுத்தை இறுக்கியும், தலையை சுவரில் இடித்தும் சத்யராஜ் கொலை செய்துள்ளார்.
தகவலறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றிப் பிரேத பரிசேதானைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தலைமறைவாக இருந்த சத்யராஜை போலீசார் கைது செய்தனர்.
















