நீலகிரி மாவட்டம், எடப்பள்ளியில் பெண்களுக்கான நடமாடும் இலவச புற்றுநோய் பரிசோதனை வாகனத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கோல் இந்தியா லிமிடெட் நிறுவனமானது, தனது சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் 5 கோடி ரூபாய் மதிப்பிலான பெண்களுக்கான நடமாடும் இலவச புற்றுநோய் பரிசோதனை வாகனத்தை வழங்கியது.
இதனை எடப்பள்ளி சித்தகிரி சாய் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதன் மூலம் ஒன்றரை லட்சம் தாய்மார்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த மருத்துவ சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியை தொடர்ந்து எடப்பள்ளி சாய்பாபா கோயிலில் மத்திய அமைச்சர் எல் முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.
















