கோவையில் நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழக அரசை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை சிங்காநல்லூரில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச் செயலாளர் கோட்டீஸ்வரராவ் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசை கண்டித்து கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
















