நீலகிரி மாவட்டம், முத்தநாடு மந்தில் பகுதியில், தோடர் பழங்குடியின மக்கள் மொற்பர்த் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடினர்.
நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் தோடரின மக்களின் பாரம்பரிய மொற்பர்த் பண்டிகை ஆண்டின் இறுதியில் கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் முத்தநாடு மந்தில் பகுதியில் மொற்பர்த் பண்டிகை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதில் பங்கேற்ற தோடர் இன மக்கள் பாரம்பரிய உடையை அணிந்து பழமை வாய்ந்த கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். அப்போது தோடர் இன மக்களின் பாரம்பரிய நடனம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது.
















