திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையத்தில் வட மாநில இளைஞரை சிறுவர்கள் அரிவாளால் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
திருத்தணி செல்லும் ரயிலில் மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்துள்ளார். அப்போது கஞ்சா போதையில் அங்கு வந்த 4 சிறுவர்கள் அந்த இளைஞரை அரிவாளால் தாக்குவது போல் ரீல்ஸ் எடுத்துள்ளனர்.
பின்னர் அந்த இளைஞரை சராமாரிய வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இளைஞர் திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து சென்ற போலீசார் வடமாநில இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதில், நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அரிவாளால் வெட்டிய 4 சிறுவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
















