விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல வழியின்றி தவிக்கும் மக்கள் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகக் குற்றம்சாட்டினர்.
வவ்வால்குன்றம் கிராமத்தில் 100-க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், இப்பகுதியில் உயிரிழப்புகள் ஏற்பட்டால் சுடுகாட்டிற்கு செல்ல முறையான பாதை இல்லை என மக்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்நிலையில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது உடல் தனியார் விவசாய நிலத்தின் வழியே சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இது தொடர்பாகப் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை எனத் தெரிவித்த அப்பகுதியினர் முறையான பாதையை ஏற்படுத்தித் தர அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.
















