ரஷியாவில் இரவு ஸ்பீக்கரில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட அண்டை வீட்டாரை எச்சரிக்க, பெண் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரவு அதிக சத்தத்துடன் பாட்டு கேட்க வேண்டாம் என அண்டை வீட்டாரிடம் பெண் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அதனைப் பொருட்படுத்தாமல் அவர்கள் ஸ்பீக்கரில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண் மது போதையில் இருந்தபோது, வீட்டில் இருந்த ஏகே-47 துப்பாக்கியால் அண்டை வீட்டாரின் ஜன்னலை குறிவைத்து சரமாரியாகச் சுட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
















