வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஒஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து வெடித்த வன்முறையில் இரு இந்துக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், வங்கதேசத்தில் அனைத்து வகையான மத வன்முறைகளையும் சந்தேகத்துக்கு இடமின்றி அமெரிக்கா கண்டிப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், மத சுதந்திரம், கருத்து சுதந்திரம், அமைதியான கூட்டம் ஆகியவற்றுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















