NLC நிறுவனம் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பால், கடலூர் மாவட்ட மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகப் பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் சிங்கப் பெண்ணே எழுந்து வா என்ற தலைப்பில் செளமியா அன்புமணி, மகளிர் உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், NLC நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் நச்சுக்காற்று, விவசாய நிலங்களை பாதிப்பது மட்டுமின்றி, புற்றுநோயை ஏற்படுத்துவதாகக் குற்றம்சாட்டினார்.
















