சென்னை அண்ணாநகரில் உள்ள பழைய இரும்பு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
அண்ணாநகர் முதல் அவென்யூ சாலையில் 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பழைய இரும்பு குடோன் அமைந்துள்ளது.
இங்குத் திடீரெனத் தீப்பற்றியதால் குடோனில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மளமளவென எரியத் தொடங்கின. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
தகவலறிந்து அங்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியதால், அருகே வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
















