திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி முதியவரை கிராம மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
ஆம்பூர் அருகே 12 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, செல்வம் என்ற டீக்கடை உரிமையாளர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அறிந்த கிராம மக்கள் முதியவர் செல்வத்தை போலீசில் ஒப்படைத்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த ஆம்பூர் மகளிர் போலீசார், அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
















