உத்தரபிரதேசத்தில் சட்டம் – ஒழுங்கு நிலை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னோவில் இதுகுறித்து பேசிய அவர், என்னென்ன சாதிக்க முடியும் என்பதை செய்து காட்டியிருக்கிறோம் என்றும், அவற்றை மற்ற மாநிலங்கள் மாதிரிகளாகக் காட்ட முயற்சிக்கின்றன எனவும் கூறியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடியின் தொலை நோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, ஸ்மார்ட் காவல் துறை உருவாகி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
















