கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அடகுக் கடையில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், அரசூரைச் சேர்ந்தவர்கள் செல்வமணி மற்றும் லாலா ராஜேந்திரன். இவர்கள் கடந்த 22ம் தேதி சிதம்பரத்தில் உள்ள அடகுக் கடையில் மூன்று சவரன் நகைகளை அடகு வைத்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளனர்.
பின்னர் அடகுக் கடை உரிமையாளர் நகையை பரிசோதித்த போது, அது முலாம் பூசப்பட்ட நகை என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அவர் அளித்த புகாரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் செல்வமணி மற்றும் ராஜேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
















