சென்னை ஓஎம்ஆர் சாலையில் மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த சந்துரு என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், இவர் ஒக்கியம்பேட்டை பிடிசி பேருந்து நிறுத்தம் அருகே மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மூதாட்டி புகார் அளித்த நிலையில் போலீசார் சந்துருவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
















