நாமக்கலில் திமுக நிர்வாகிக்குச் சொந்தமான சாயப்பட்டறையில் இருந்து கழிவுநீர் வெளியேறிக் காவிரியாற்றில் கலப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பள்ளிப்பாளையம் அடுத்த ஒட்டமெத்தை பகுதியில் திமுக நிர்வாகி ஒருவருக்கு சொந்தமான சாயப்பட்டறை அமைந்துள்ளது.
இங்கிருந்து நாள்தோறும் விதிகளை மீறி வெளியேற்றப்படும் சாயக்கழிவுகள், நேரடியாகக் காவிரியாற்றில் கலப்பதால் ஆறு மாசடைந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்து இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















