மத்திய அரசு அறிவித்துள்ள 4 புதிய தொழிலாளர் சட்டங்களை பாரதிய மஸ்தூர் சங்கம் வரவேற்றுள்ளது.
திருப்பூரில் பாரதிய மஸ்தூர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 4 புதிய தொழிலாளர் சட்டங்களையும் வரவேற்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து சட்டங்களின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
















