இந்தியா முழுவதும் தங்கள் அட்டவணையில் நாள் ஒன்றுக்கு 130 விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் குறைத்துள்ளது.
இண்டிகோ செயல்பாட்டு குளறுபடியால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்தானது. இதனால் ஏற்பட்ட கடும் நெருக்கடியால், பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இதன் காரணமாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்படாதபடி 10 சதவீத சேவையை குறைக்க விமான போக்குவரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, 130 விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன.
















