ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார்.
தமிழகத்திற்கும், வாரணாசிக்கும் இடையேயான ஆன்மீக கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை புதுப்பிக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் தொடங்கப்பட்டது.
கடந்த 2ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வை மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இதன் நிறைவு விழா ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நாளை நடைபெற உள்ளது.
இதில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய கல்வி அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதனை முன்னிட்டு ராமேஸ்வரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் விழாவுக்கான அரங்கம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
















