திருவண்ணாமலையில் உள்ளூர் வாசிகளின் கார்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிமாநில கார்கள் மட்டும் எவ்வாறு கோயில் வரை அனுமதிக்கப்படுகிறது? எனத் தமிழக முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ராஜாராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவண்ணாமலையில் தமிழக முன்னேற்றக் கழக மாநில நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஜாராம், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
















