ஆரவல்லி மலைத்தொடர் மறுவரையறை தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட பழைய தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தது.
அதுமட்டுமில்லாமல், மத்திய அரசு பரிந்துரைகளையும், சுரங்கப் பணிகளையும் நிறுத்திவைக்கவும் உத்தரவிடப்பட்டது.
மேலும், ஆரவல்லி மலைத்தொடர் குறித்து ஆராய புதிய குழு அமைக்கப்பட வேண்டும் என்று கூறிய தலைமை நீதிபதி, மத்திய அரசுக்கும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப ஆணையிட்டார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
















