இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால், நமக்கு இரவு பகல் என மாறி மாறி வருகிறது.
பூமி தன்னை தானே சுற்றி வர எடுத்துக் கொள்ளும் 24 மணி நேரம் ஒரு நாள் எனக் கணக்கிடப்படுகிறது.
அதற்கேற்றவாறே நாம் கடிகாரத்தை வடிவமைத்து அன்றாட செயல்களைத் திட்டமிட்டு செய்து வருகிறோம்.
இந்நிலையில் பூமி இப்போது இயல்பை விட மெதுவாகச் சுழன்று வருகிறது. இதன் விளைவாக ஒரு நாளில் சில மில்லி விநாடிகள் அதிகரிக்கின்றன.
இவை சிறியதாகத் தோன்றினாலும், நம் நேர கட்டுப்பாட்டில் சில பாதிப்புகள் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
சந்திரனின் ஈர்ப்பு விசையால் கடலில் ஏற்படும் ஓதங்கள், ஒரு இழுவையை போல செயல்படுவது பூமியின் சுழற்சி ஆற்றலை குறைக்கிறது.
இதன் காரணமாக ஒரு நாளுக்கான நமது நேரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இருப்பினும் அதனை நம்மால் உணர முடியாது.
இறுதியில் இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
















