திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பையொட்டி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. பிரசித்தி பெற்ற கோயிலில் நாள்தோறும் பல்வேறு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நாளை காலை 5.15 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதையொட்டி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் ஸ்ரீரங்கம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் வாகனத்தில் செல்லும் போது பாதுகாப்பாக செல்ல வேண்டுமென காவலர்கள் பாடல் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
















