கர்நாடகாவில் முதியவர் ஒருவர் தனது பேரனை மது குடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெல்காம் மாவட்டத்தின் ரேபாக் நகரில் உள்ள ஒரு பாரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருந்தவர்களின் எதிர்ப்பையும் மீறி, அந்த முதியவர் தனது பேரனுக்கு மது அருந்தக் கொடுத்தார்.
அந்தச் சிறுவனும் அசால்டாகா மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
















