நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது.
வாணவேடிக்கைகளுடன் நடைபெறும் டைம்ஸ் சதுக்க புத்தாண்டு கொண்டாட்டம் உலகப் புகழ்பெற்றது. வருடந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இங்குக் கூடுவார்கள்.
இந்த நிகழ்வில் பிரமாண்டாக வெடித்து சிதறும் கிறிஸ்டல் பந்துதான் சிறப்பம்சம். இதனையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
















